×

நாடு முழுவதும் பள்ளிகளில் ஒரே மாதிரியான ஆடை கட்டுப்பாடு: உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தாக்கல் செய்த பொது நல வழக்கில், ‘நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மற்றும் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான ஆடை கட்டுப்பாட்டை உருவாக்க வேண்டும். இதனை அமல்படுத்தும் போது நாட்டில் சகோதரத்துவம், சமத்துவம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு ஊக்குவிக்கப்படுவது மட்டுமில்லாமல், ஆடைகளின் காரணமாக எழுப்பப்படும் பிரச்னைகளும் தீர்க்கப்படும்’ என தெரிவித்திருந்தார்.இந்த மனு நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘இதுபோன்ற விவகாரங்கள் நீதிமன்றத்தின் விசாரணை வரம்புக்குள் இல்லை என்பதால், மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது,’ எனக்கூறி தள்ளுபடி செய்தனர். இதையடுத்து, மனு வாபஸ் பெறப்பட்டது….

The post நாடு முழுவதும் பள்ளிகளில் ஒரே மாதிரியான ஆடை கட்டுப்பாடு: உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Ashwini Upadhyay ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...